Published on 22/01/2025 | Edited on 22/01/2025
பெரியார் குறித்து சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று பெரியாரிய ஆதரவாளர்கள் சார்பில் சீமான் வீட்டை முற்றுகையிட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சீமான் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களும் அங்கு குவிந்துள்ளனர்.
இந்நிலையில் மே 17 அமைப்பு, தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சீமானுக்கு எதிரான பதாகைகளுடன் நீலாங்கரை பகுதியில் குவிந்துள்ளனர். அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.