தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.
![big boss](http://image.nakkheeran.in/cdn/farfuture/G1gzLBufuoliqfpp4iz_cACyXCyeEzKTLC5zjMBC8tw/1568956977/sites/default/files/inline-images/815_6.jpg)
இந்த நிலையில் கடந்த வாரம் சேரன் பிக் பாஸ் வீட்டிலிருந்து சீக்ரெட் ரூமில் வைத்து இருந்தனர். பின்பு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இதனையடுத்து சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் இந்தவாரம் எவிக்சன் லிஸ்டில் உள்ளனர். மேலும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் டாஸ்க்குகளில் எந்த போட்டியாளர் வெற்றி பெறுகிறரோ அவர் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வார் என்றும் பிக் பாஸ்ஸில் கூறியுள்ளனர். இந்த டாஸ்க்குகளில் தர்ஷன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இந்த நிலையில் ஷெரின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் மிக குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதால் இவர்களில் ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் வேட்டை விட்டு வெளியேறுவார் என்று சொல்லப்படுகிறது. மேலும் தற்போது நிலவரப்படி வாக்குகளில் ஷெரின் கடைசி இடத்தில் இருப்பதால் அவர் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர். மேலும் சேரன் வயதில் மூத்தவராக இருப்பதால் கஷ்டமான டாஸ்குகளை சமாளிக்க முடியாமல் விளையாடி வருகிறார். இதனால் டாஸ்க்குகளை சமாளிக்க முடியாமல் சேரன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.