
தற்போதைய திமுக அரசு ஆட்சியை நடத்த ஒவ்வொருவர் வீட்டுக் கதவை தட்டுவதாக சசிகலா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா பேசுகையில், ''மக்களுடைய பையிலிருந்து தான் பணத்தை எடுத்து அரசாங்கத்தை நடத்தப் பார்க்கிறார்கள். ரோட்டில் திருடர்களை பிடிப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் டிராபிக் போலீசை எங்கு பார்த்தாலும் போட்டு, போகிற இடத்தில் எல்லாம் டூவீலரில் போகிறவர்களை பிடித்து நிறுத்தி வரி வசூல் செய்கிறார்கள். இந்த மாதிரி தமிழ்நாடு முழுவதும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மின்சார கட்டணத்தை ஏற்றி விட்டார்கள். இப்படி எல்லாவற்றையும் ஏற்றி இவர்கள் பணத்தை கட்டு என ஒவ்வொரு வீட்டுக்கும் கதவையும் தட்டுகிறார்கள். இந்த ஒரு வேலையை மட்டும் தான் இந்த அரசாங்கம் வந்ததிலிருந்து செய்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவதற்கு சரியான முறையில் ஆட்சியை பண்றதுக்கு உண்டான புத்திசாலித்தனமும் இல்லை'' என்றார்.