Skip to main content

எல்லையில் நின்ற யானை எங்கே?- கண்டுபிடிக்க கும்கி வரவழைப்பு!

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

Where is the elephant standing on the border?-Kumki invites to find!

 

கோவை அருகே தமிழக-கேரள எல்லையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானையை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்கிறது.

 

கோவையின் ஆனைக்கட்டி பகுதி தமிழக - கேரள எல்லைக்கு இடைப்பட்ட பகுதியாக இருக்கிறது. இந்த பகுதியில் சில மலை கிராமங்களும் உள்ள நிலையில் கோவை ஆனைக்கட்டி பட்டிச்சாலை பகுதியில் காட்டு யானை ஒன்று இரண்டு நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று காணப்பட்டது. இதனால் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால்  தமிழக எல்லையில் இருக்கும் அந்த யானைக்கு சிகிச்சை அளிப்பது கேரள வனத்துறையா? தமிழக வனத்துறையா? என்ற குழப்பம் நிலவியது. இது தொடர்பாக தமிழக வனத்துறை கேரள வனத்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில் அந்த யானை மாயமானது.

 

8 வயது கொண்ட அந்த ஆண் யானையைத் தேடும் பணிக்காக கோவை டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம் என்ற கும்கி யானை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன் கேமரா மூலம் யானையை தேடும் பணியும் மறுபுறம் நடந்து வருகிறது. யானையை கண்டுபிடிக்கும் பணிக்காக மேலும் ஒரு கும்கி யானையை கொண்டுவர வனத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்