கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், வெளி மாநிலத் தொழிலாளர்கள் சம்பந்தமாக யார் இதற்கு காரணம் என்பது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் யார் என்று முடிவு செய்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கக்கூடிய உரிமை முழுமையாக காவல்துறைக்கு இருக்கிறது.
இந்தியாவில் மிகப் பெரிய மாற்றம் நடைபெறக் கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் நேற்று கூட பேசியுள்ளார் என்னை இந்த பொறுப்பிலிருந்து விலக்குவதற்கு சதி செய்கிறார்கள் என் உயிருக்கு கூட ஆபத்து இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். இதெல்லாம் ஒவ்வொரு சமயத்திலும் தேர்தல் வரும் போதெல்லாம் போர் வருகிறது என்று சொல்வார்கள். அண்டை நாட்டை சொல்லியே ஓட்டு கேட்பார்கள். ஒற்றுமையை வைத்து ஒன்று, இரண்டு சதவீதம் ஓட்டு வாங்கினால் எப்படியாவது ஆட்சியில் உட்கார்ந்து விடலாம் என்று குறுக்கு வழி ஏமாற்று வேலை செய்கிறார்கள்'' என்றார்.