Skip to main content

செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை எப்போது? - பதில் அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

When is Senthil Balaji's surgery? - Answered by Minister Ma. Subramanian
கோப்புப் படம்

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். மேலும், செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து இடைக்கால ஜாமீன் மனுவும், அமலாக்கத்துறை சார்பில் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனுவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 

 

இதில், செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் நடந்தது. மேற்குறிப்பிட்டுள்ள மற்ற இரு மனுக்கள் மீதும் நேற்று விசாரணை நடந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறையையே பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றவும் அனுமதி அளித்தது.

 

மேலும், இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை விரும்பினால் அவர்கள் முடிவு செய்யும் மருத்துவ நிபுணர்கள் குழு செந்தில் பாலாஜியை பரிசோதிக்கலாம். அவரது உடல்நிலையை, சிகிச்சையை ஆராயலாம் என உத்தரவு பிறப்பித்தனர்.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீதிமன்றத்தின் அனுமதியை அடுத்து நேற்றிரவு அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். நாங்கள் மருத்துவர்களுடன் ஆலோசித்த போது இன்னும் இரண்டு மூன்று தினங்களில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்