தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான மானியக் கோரிக்கைகளும், விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை மற்றும் கைத்தறி துணிநூல் துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது.
இதில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது துறை குறித்தான விவகாரங்களை பேசினார். பிறகு நன்றி தெரிவிக்கும்போது அவர், “நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோபாலபுரம்; பின் என் தந்தை மேயரான பிறகு வேளச்சேரி பகுதிக்கு சென்றுவிட்டோம். ஆனால், கோபாலபுரத்தில் இருந்தபோது சிறுவயதில் நான், தற்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எல்லாம் ரோட்டில் கிரிக்கெட் விளையாடுவோம்.
திமுகவை கிரிக்கெட் அணியாக சித்தரித்த அமைச்சர் உதயநிதி! பேரவையில் கலகலப்பு
கலைஞரோடு நான் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். கலைஞர் பந்து போடுவார்; பேட்டிங் செய்துவிட்டு சென்றுவிடுவார். அவர் மட்டுமல்ல, தற்போதைய நம் முதலமைச்சருடனும் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். அவர் மிகச் சிறந்த லெக் ஸ்பின் பெளலர். அவர் பந்து வீசினால் யாராலும் விளையாட முடியாது. இங்கு எப்படி சிக்ஸர் அடிக்கிறாரோ அப்படியேதான் பௌலிங்கிலும்” என்று பேசினார்.