Skip to main content

கமலின் பிறந்த நாள்; ரசிகர்கள் சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

 welfare schemes were provided to the people on behalf of Kamal fans

 

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் 69வது பிறந்தநாளை அவரது ரசிகர்களும், கட்சியினரும் இன்று கொண்டாடினர். இதில், ஈரோடு பகுதியில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் இதயம் நற்பணி இயக்கத்தின் தலைவரும், கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ஈரோடு எஸ்.வி.மகாதேவன் ஏற்பாட்டில், ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி, நேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், பெண்களுக்கு சேலைகள், சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ஜி.சிவசண்முகம், மக்கள் நீதி மய்யம் 29வது வார்டு செயலாளர் சந்திரசேகரன், அந்தியூர் முருகன், ராயல் ராமசாமி, முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதுகுறித்து பேசியர் மகாதேவன், “ஈரோடு கருங்கல்பாளையம் கேஎன்கே சாலையில் 1981 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நற்பணி இயக்கம் தொடங்கினோம். நாங்கள் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்கள். அவரது பிறந்தநாளன்று 43 வருடங்களாக பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறோம். கமல்ஹாசனின் 69வது பிறந்தநாளையொட்டி இனிப்புகள், பெண்களுக்கு சேலைகள், ஆதரவற்றவர்களுக்கு உணவுகள் வழங்கி, இந்தியாவின் நலமும் உலக நலமுமே என் நலம், சுயநல அரசியல் வியாபாரங்களிலிருந்து அகன்று நின்று மக்கள் நலம் பேணுவேன், எனது குரல் நற்பணி, எனது சிந்தனை என் தலைவன் கமல்ஹாசன். என் இயக்கத்திற்கும், நிகழும் அரசியலுக்கும் வேறுபாட்டை உணர்ந்து செயல்படுவேன், புதிய சமூகம் என் கனவு, மனித நேயம் என் லட்சியம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்