Skip to main content

ஏப்ரல் 9 முதல் 13 வரை சமரச தீர்வு விழிப்புணர்வு வாரம்

Published on 07/04/2018 | Edited on 07/04/2018
chennai

 

சமரச தீர்வு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான தமிழ்நாடு முழுவதும் சமரச தீர்வு விழிப்புணர்வு வாரம் ஏப்ரல் 9 ம் தேதி முதல் 13 வரை  கொண்டாடப்பட உள்ளது.

 

தமிழ்நாடு சமரச தீர்வு மையம் 2005 ம் ஆண்டு ஏப்ரல் மாதம்  9 ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் 14ம் ஆண்டு துவக்கத்தை ஒட்டி,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து சமரச தீர்வு மையங்களில் சமரச தீர்வு விழிப்புணர்வு வாரம்  கடைபிடிக்கப்படவுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற தமிழ்நாடு சமரச தீர்வு மையத்தின் இயக்குனர் பி.முருகன்  தெரிவித்துள்ளார்.

 

சமரச தீர்வு விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி, காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.இதில் சட்ட கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் காலை 10 மணிக்கு  நடைபெறும் நிகழ்ச்சியில் சமரச தீர்வு மைய தலைவரும் உயர்நீதிமன்ற நீதிபதியுமான குலுவாடி ஜி.ரமேஷ்,  உறுப்பினர்களான  நீதிபதி எஸ்.மணிக்குமார், நீதிபதி பி.கலையரசன் ஆகியோர் கலந்து கொள்கிறனர். 

சார்ந்த செய்திகள்