Skip to main content

சொர்க்கத்துக்கு டிக்கெட் விற்கும் வெப்சைட்!

Published on 01/12/2017 | Edited on 01/12/2017
சொர்க்கத்துக்கு டிக்கெட் விற்கும் வெப்சைட்!

குண்டக்க மண்டக்க யோசிக்க எல்லாராலும் முடியும். ஆனா அதை வியாபாரமாக்கி காசாக்கும் திறமை சிலருக்குத்தான் இருக்கும். எல்லோரும் பயணத்துக்கு டிக்கெட் விக்கிறமாதிரி நாம பரலோகத்துக்கு டிக்கெட் வித்தா என்னங்கிற பலே ஐடியா ஒருவர் மனதில் தோன்றியதன் விளைவுதான் lineforheaven.com என்ற இணையதளம்.



The first religion-based Web 2.0 site in history என்ற அறிவிப்புடன் எக்கசக்கமான ஆட்களை மெம்பராக சேர்த்துக் கொண்டிருக்கிறது இந்த இணையதளம். இந்த தளத்தில் கொடுத்திருக்கும் சில டாஸ்குகளை நீங்கள் செய்தால் உங்களுக்கு கர்மா பாயிண்ட்டுகள் கொடுக்கப்படும். நீங்கள் நன்கொடை கொடுத்தும் கர்மா பாயிண்ட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு டாலருக்கு 10 பாயிண்ட்டுகள் கிடைக்கும். மாத வருமானத்தில் பத்தில் ஒரு பங்கு கொடுத்தால் பாயிண்ட்டுகள் வாரி வழங்கப்படும்.

உங்கள் கர்மா பாயிண்ட்டுகள் அதிகரிக்க அதிகரிக்க நீங்கள் சொர்க்க வரிசையில் மேலும் மேலும் இறைவனுக்கு அருகாமையில் முன்னேறிச் செல்லுவீர்கள். தற்சமயம் பிஜே என்ற பெண்மணி 23836 கர்மா பாயிண்ட்டுகளுடன் கடவுளுக்கு மிக அருகாமையில்(!) நின்று கொண்டிருக்கிறார். 



இதற்கிடையே இந்தத் தளம் தனது உறுப்பினர்களைக் கொஞ்சம் தானதர்மமும் செய்ய வைக்கிறது. அதற்கும் நிறை கர்மா பாயிண்ட்டுகள் உண்டு. இங்குதான் சூட்சுமமும் இருக்கிறது. ஏழை எளியோருக்கு, நோயுற்றோருக்கு, மாற்றுத் திறனாளருக்கு செய்யும் சேவைகள் நமக்கு தானாகவே இறையருளைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பது பொதுவான  ஆன்மீக விதி. இறையருள் பெருக வாழ்வில் நன்மைகளும் நடக்கும்.

நன்மைகள் நடக்கும்போது "நீ பெற்ற கர்மா பாயிண்ட்டுகளால்தான் நன்மைகள் நடக்கிறது" என்பதை மட்டும் மக்களை நம்பவைத்து விட்டால் போதும். காலம் முழுவதும் அவர்களை தனது கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

கொஞ்சம் மதக் கருத்துக்களும், நிறைய மனவியலும் தெரிந்தால் மக்களை எளிதில் ஏமாற்றி வசப்படுத்திக் கொள்ளலாம் என்பதை மதவாதிகள் மீண்டும் மீண்டும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

-மனோ
ஜெயராஜ் விஜய்குமார்

சார்ந்த செய்திகள்