Skip to main content

நாங்கள் பேசினால் 2 நிமிடம் தான் காட்டுகிறீர்கள், தினகரன் பேசினால் 40 நிமிடம் காட்டுகிறீர்கள்: EPS

Published on 14/01/2018 | Edited on 14/01/2018
நாங்கள் பேசினால் 2 நிமிடம் தான் காட்டுகிறீர்கள், தினகரன் பேசினால் 40 நிமிடம் காட்டுகிறீர்கள்: எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 

காவிரி வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு வர உள்ளது. இது விவசாயிகளுக்கு சாதகமான தீர்ப்பாக இருக்கும். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை தான் கேட்கிறோம். டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தரப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீரை கர்நாடகாவிடம் கேட்கிறோம். 

அதிமுக அரசு மதசார்பற்ற அரசு. உயிரோட்டமுள்ள இயக்கம். இன்றைய கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்களில் 15 பேர் வரை வரவில்லை. உடல் நலம் சரியில்லாத காரணத்தால் வரவில்லை. 386 பேர் இன்றைய கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். கட்சியின் அடித்தளமே ஊராட்சி செயலாளர்கள். அவர்கள் அனைவரும் அதிமுகவில் எங்கள் பக்கம் இருக்கின்றனர்.

வைரமுத்து பிரச்சனை பெரும் பிரச்சனை, அதை இந்த நேரத்தில் பேசுவது சரியாக இருக்காது. கமல்ஹாசன் சுற்றுப்பயணம் பற்றியெல்லாம் பதில் சொல்ல முடியாது. இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் ஒரு சில இயக்கங்கள் தான் நிலைத்து நிற்கிறது. அது அதிமுக தான். 

கர்நாடகாவில் தேர்தல் அறிவித்த பின்னர் அதிமுக வேட்பாளர் யார் என்று முடிவு செய்வோம். தினகரன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் அவர் என்ன பெரிய கட்சியா நடத்துகிறார். அவரே சுயேட்சை வேட்பாளர். அவர் ஆர்.கே.நகரில் எப்படி வென்றார் என்பது உங்களுக்கே தெரியும். ஊடகங்கள் தான் அவரை தூக்கிப்பிடிக்கிறீர்கள். அவரை ஜெயலலிதா 10 ஆண்டுகள் வீட்டு பக்கமே வரக்கூடாது என்று கூறியிருந்தார். அதன் பின்னர் கட்சியை விட்டு நீக்கிவிட்டார்.

அவரை ஊடகங்கள் தான் தூக்கிப்பிடிக்கிறீர்கள் நாங்கள் பேசினால் கூட 2 நிமிடம் தான் காட்டுகிறீர்கள், தினகரன் பேசினால் 40 நிமிடம் காட்டுகிறீர்கள். உங்களுக்கு விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்பதற்காக மிகைப்படுத்தி காட்டுகிறீர்கள்.” இவ்வாறு கூறினார்.

சார்ந்த செய்திகள்