Published on 28/08/2018 | Edited on 28/08/2018
![tks ilangovan](http://image.nakkheeran.in/cdn/farfuture/RvtcHnmYX4xiE_PHyWcMaD0vmfofT1BiWk8rI1uQgw4/1535479814/sites/default/files/inline-images/sdcszdsd.jpg)
திமுக செய்திதொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் அவரிடம் அழகிரியை குறித்து கேள்வி கேட்டக்கப்பட்டது அதற்கு பதிலளித்து பேசுகையில்,
ஜெயலலிதா கொடுத்த அச்சுறுத்தலையே சந்தித்துவிட்டோம் அழகிரி ஜெயலலிதாவை ஒப்பிடுகையில் எங்களுக்கு சிறிய அச்சுறுத்துதல்தான். ஒரு கட்சி என்றாலே இதுபோன்ற பல அச்சுறுத்தல்களை தலைவர் சந்திக்க வேண்டிவரும். அப்படி பார்க்கையில் ஜெயலலிதா எங்களுக்கு பல பெரிய அச்சுறுத்துதல்களை கொடுத்தார் ஆனால் அதையே கட்சியின் தலைமை எதிர்கொண்டுவந்துள்ளது. இதையும் சமாளிப்போம் என கூறினார்.