காஞ்சிபுரம் கேளம்பாக்கத்தில் நடந்துவரும் அதிமுக பாஜக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்,
இந்த நல்ல நேரத்தில் ஒரு அருமையான கூட்டணியை முதல்வரும் துணைமுதல்வரும் ஆழ்ந்து யோசித்து வெற்றிகரமான கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணி வெற்றிபெறவில்லை என்று சொன்னால் வேறு எந்த கூட்டணியும் வெற்றிபெற முடியாது. இந்த கூட்டணி அமைத்ததற்கு என் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கூட்டணியில் பாமக இணைவதற்கு தமிழகத்தின் நலன் பெருகவேண்டும் என்ற நோக்கில் 10 அம்ச கோரிக்கையுடன் இந்த கூட்டணியில் சேர்ந்திருக்கிறோம்.
10 அம்ச கோரிக்கையில் முதலாவது ஒன்று 7 தமிழர்களை விடுதலை செய்வது. ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் ஆனால் தற்போது நிலை அப்படி இல்லை எனக்கூறினார்.
மேலும் தமிழை மத்திய அலுவல் மொழியாக வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பிரதமரிடம் வைக்கிறேன் என கூறினார்.