ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க வந்த அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களிடம் பேசும்போது,
"நாங்கள் வாக்குகேட்டு செல்லும்போது பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. பொதுமக்களிடம் பெரிய எழுச்சியைக் காண முடிகிறது. முதலமைச்சர் கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.
ஈரோடு மாவட்ட வளர்ச்சிக்காக 320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு 6 மாதத்திற்குள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும். வணிகர்கள் சில கோரிக்கைகள் வைத்திருந்தனர். அவையும் தேர்தல் முடிந்த பிறகு நிறைவேற்றி தரப்படும். திருமகன் ஈவேரா எம்எல்ஏவாகி ஒன்றை ஆண்டு காலத்திலேயே இறந்துவிட்டார். அவருக்கு பதிலாக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவார்"என்றார்.