Published on 30/04/2025 | Edited on 30/04/2025

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுவித்துள்ளதாகப் போலீசில் பரபரப்பு புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை காவல் ஆணையரகத்தில் நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த புகாரில், தேனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் இன்ஸ்டாகிராம் வலைத்தளப் பக்கத்தில் சீமானுடைய தலை துண்டாக்கப்படும் என்றும், தெலுங்கு பேசும் மக்களை தவறாக பேசுவதாக சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். எனவே சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.