Skip to main content

''இதை நாங்களே எதிர்பார்க்கவில்லை''- ஜெ.தீபா

Published on 29/05/2020 | Edited on 29/05/2020
 'We don't expect this' - Interview with J. Deepa

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீபக், தீபா என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்திருந்த நிலையில், தீர்ப்பில் திருத்தம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவினை அளித்துள்ளது. 


ஜெ.வின் நேரடி வாரிசுகளாக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகிய இருவரும் நேரடி வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜெ.தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதிமுகவினர் உயர்நீதிமன்ற தீர்ப்பை தலைவணங்கி ஏற்க வேண்டும். ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளாக எங்களை நீதிமன்றம் அறிவிக்கும் என்பதை நாங்களே எதிர்பார்க்கவில்லை. அதிமுக அரசு என்ன செய்தாலும் நான் சட்ட ரீதியாக சந்திப்பேன். 

 

 


நீதிமன்ற உத்தரவின்றி வேதா இல்லத்திற்கு செல்லமாட்டேன். ஜெயலலிதாவை பார்க்கக்கூடாது என தடுத்தது அதிமுக அரசுதான். ஜெயலலிதா இறந்த பிறகும் கொச்சைப்படுத்துவது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதிமுகவிற்கு எதிராக கேள்வி எழுப்புவதால் என்னை குறி வைக்கின்றனர். எங்களுக்கு முழு அதிகாரத்தையும் உயர்நீதிமன்றம் வழங்கியது வரவேற்கத்தக்கது என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்