Published on 05/09/2023 | Edited on 05/09/2023
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா இளவரசி ஆகியோர் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த பொழுது வெளியே ஷாப்பிங் செல்வதைப் போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தன. இதனால் சிறையில் சொகுசு வாழ்க்கை அனுபவிக்க சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோர் ஆஜராகச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து இவர்கள் இருவரும் ஆஜராகாததால் தற்பொழுது பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.