Skip to main content

பாலம் வேண்டும் - கலெக்டரிடம் மனு கொடுத்த மக்கள்

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

Want a bridge - People petitioned the Collector


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைகள் குறித்து ஆட்சியரிடம் மனுக்களை வழங்கினர்.

 

அப்போது பெரிய புலியூர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- 'எங்கள் பகுதியில் மாருதி நகர், அம்மன் நகர் உட்படப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் செல்ல பள்ளம் ஓடையின் குறுக்கே பாலம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் விவசாயம், ஏராளமான குடியிருப்புகள், விசைத்தறி கூடங்கள் உள்ளன. எனவே இப்பகுதி மக்களுக்குப் பாலம் அமைத்துக் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்