பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு..!
அரசு பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதியம், ரூ.700 உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், 2012ல், தமிழக அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். முதலில், 5,000 ரூபாய் மாத ஊதியம் வழங்கப்பட்டது. பின், 2014ல், 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மூன்று ஆண்டுகளாக, ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ரூ.700 சம்பளம் உயர்த்தி வழங்க, எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார் கூறியதாவது: பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு, ரூ.9,200 மாத ஊதியம் நிர்ணயித்துள்ளது. அந்த தொகையை, தமிழக அரசு முறையாக பெற்று, அதை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.