Published on 28/07/2018 | Edited on 28/07/2018
நாடாளுமன்ற தேர்தலுக்கான மின்னனு வாக்கு பதிவு எந்திரங்கள் அரசியல் கட்சியினர் முன்னிலையில் முறையாக அடுக்கி வைப்பு!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில், கடலூர் மாவட்ட பாரளுமன்ற தேர்தலுக்கான மின்னனு வாக்கு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம் கடந்த மாதம் கோட்டாட்சியர் முன்னிலையில் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் மின்னணு பெட்டிகள் சரியான முறையில் அடுக்கவில்லை என தெரியவந்தது.
அதையடுத்து தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, காங்கிரஸ், தேமுதிக, வி.சி, கம்யூனிஸ்ட்கள் உள்பட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா கிடங்கிற்கு வைத்திருந்த சீல்லை பிரித்தார். பின்னர் 5 பெட்டிகள் அடுக்கப்பட்ட வரிசைகளை, பிரித்து 4 பெட்டிகள் கொண்ட வரிசையாக அடுக்கி வைத்தனர்.