விஐடி பல்கலைழக வேந்தர் டாக்டர் விசுவநாதனின் 80 வது பிறந்தநாள் விழாவை இன்று வேலூரில் உள்ள மக்கள் இணைந்து வேந்தர் 80 முத்துவிழாவாக வெகு விமர்சியாக கொண்டாடினர். இதற்கான விழா வேலூரில் உள்ள தண்டபாணி திருமண மண்டபத்தில் டிசம்பர் 23ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம் தலைமைவகித்தார். வேந்தர் 80 முத்து விழாக்குழு செயலாளர் மு.சுகுமார்வரவேற்றார்.
நிகழ்ச்சியில் புதிய நீதிகட்சித்தலைவர் ஏ.சி.சண்முகம் பங்கேற்று தொடக்க உரையாற் றியபோது, முத்துவிழாக்கானும் வேந்தர் விசுவநாதன் கொள்கை பிடிப்புக்கொண்டவர், பெரியார் அண்ணாவின் கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்தவர், எம்ஜிஆர் ஜெயலலிதாவின் அன்பைபெற்றவர், கொள்கை பிடிப்பின்காரணமாக வெற்றிக்கண்டவர். நாடாளுமன்றத்தில் விவாதங்களில் பங்கேற்று கொள்கைகளை ஆணித்தரமாக வாதிட்டவர் அவர் நூற்றாண்டு காண வாழ்த்துகிறேன் என்றார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற காப்புகட்டு என்ற நிகழ்ச்சியில் வியர்வையின் வெற்றி என்ற நூலை மாநில வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுதுறை அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, திராவிட இயக்க அரசியலில் அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா என்ற முப்பெரும் தலைவர்களிடம் அரசியல் கற்றுக்கொண்டவர் வேந்தர். எதையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி காணமுடியும் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவர். அரசியலுக்கு அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டு எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அரவனைப்பால் அமைச்சர் பதவி பெற்றவர். அவரது மகன்கள் அவருக்கு தூண்களாக விளங்கி விஐடி என்ற கல்விக்கோயிலை காத்து வருகின்றனர். முத்துவிழா கண்டுள்ளவேந்தர் விசுவநாதன் நூற்றாண்டு விழாவையும் கொண்டாட வாழ்த்துகின்றேன் என்றார்.
நிகழ்ச்சியில் புஸ்பாசொருப் என்ற எழுத்தாளர் உருவாக்கிய ஸ்டார்ஸ் அண்டு சேப்ளிங்ஸ் (Stars and Saplings) என்ற ஆங்கில நூலினை தமிழகமேனாள் அமைச்சர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் வெளியிட சென்னை வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்ஐசரி.கே.கனேஷ் பெற்றுக்கொண்டார். தமிழகத்தில் உள்ள கவிஞர்கள் வேந்தரைபற்றி இயற்றிய 84 கவிதைகள் கொண்ட வேந்தர் 80 கவிமலர் தொகுப்பு நூலினை தமிழகமேனாள் அமைச்சர்சி பொன்னையன் வெளியிட திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கலைப்புலிஎஸ்.தாணு பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் தமிழக முன்னால் அமைச்சர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் வாழ்த்தி பேசும்போது, அண்ணா தொடங்கிய இயக்கத்தில் எத்தனையோ பேர் அண்ணாவை நோக்கி சென்றனர். ஆனால் அண்ணாவால் விரும்பி அழைக்கப்பட்டவர் ஜி.விசுவநாதன். விழுப்புரத்தில் நடைபெற்ற இயக்க பொதுக்கூட்டத்திற்கு பிறகு எங்களிடம் அண்ணா சொன்னது நாடாளுமன்ற தேர்தலில் வந்தவாசி தொகுதியில் விசுவநாதன் என்ற வேலூர் இளைஞரை நிற்கவைக்கபோகிறேன் என்று கூறினார். காரணம் விசுவநாதன் ஆற்றியமேடைப்பேச்சை கேட்ட அண்ணாவிற்கு அவரின் அரசியல் புலமையை எடுத்துக்காட்டியது.
நாடாளுமன்றத்தில் பிரதமராக இருந்த இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கமுடிவு செய்தபோது அதை எதிர்த்தவர் ஜி.விசுவநாதன். கச்சத்தீவில் தமிழர்களின் உரிமைபறிக்கப்பட்டுள்ளது,. அதேபோன்று முல்லைப்பெரியாறு அணைவிவகாரம் காவிரிநீர்பிரச்னை என்றுதமிழர்களுக்குஎதிரான பல்வேறு பிரச்னைகள் கடந்த 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. அதைதீர்க்க ஜி.வி.போன்றவர்கள் தலையிட்டால் தீர்க்கமுடியம், தீராதமக்கள் பிரச்னைகளை தீர்க்க மக்கள் ஒரு குடையின் கீழ் வரவேண்டும் அதனை ஜி.வியால் உருவாக்கமுடியும் அதனை உருவாக்கி தமிழகத்தில் வரலாறு படைக்க வேண்டும் என்றார்.
முத்து விழாவில் தமிழகமேனாள் அமைச்சர்சி பொன்னையன் வாழ்த்தி பேசுகையில் முத்துவிழாக்காணும் விசுவநாதன் தீர்க்கசிந்தனை கொண்டவர் நுண்ணறிவு படைத்தவர் எதிலும் துணிந்து செயல்படக்கூடியவர். அதில்வெற்றியும் கண்டவர். கல்வித்துறையில் விஐடி என்ற நிறுவனத்தை உருவாக்கி தமிழகம்மட்டுமின்றி நாட்டளவில் முதலிடத்திற்கு அதனைகொண்டு சென்றுள்ளார். இது அவரது திறமையின் வெளிப்பாடு. உலகில் உள்ள தமிழர்களை ஒருகுடையின் கீழ்கொண்டு வரவேண்டும் என்பதற்காக தமிழியக்கத்தினை உருவாக்கியுள்ளார். அவரது இந்ததமிழ்ப்பணி வளரட்டும் என்றார்.