Skip to main content

விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால் தந்தைக்கு உயிரோடு தீ வைத்த மகன்...!

Published on 10/01/2019 | Edited on 10/01/2019

 

ff

 

பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் சுமார் 500 தியேட்டர்களில் நடிகர் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது. வேலூரில் நான்கு தியேட்டர்களில் அப்படம் வெளியாகியுள்ளது.

 


வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் புதுத்தெருவை சேர்ந்தவன் 20 வயதான அஜித்குமார். அஜித்குமார் என்கிற பெயர் வைத்ததாலோ என்னவோ தீவிர அஜித் வெறியனாகவே இருந்து வந்துள்ளான். 

 


படம் பார்ப்பதற்காகவும், அஜித்திற்கு கட்அவுட் வைக்கவும், பாலபிஷேகம் செய்யவும் தனது தந்தை பாண்டியனிடம் பணம் கேட்டுள்ளான். கூலி தொழிலாளியான பாண்டியன், பணம்மில்லடா போடா எனச் சொல்லியுள்ளார். நீ பணம் தரலன்னா அவ்வளவுதான் என மிரட்டியுள்ளான், டேய் போடா எனச் சொல்லிவிட்டு அவர் இரவு தூங்க சென்றுள்ளார்.

 

பணம் தரவில்லை என்கிற கோபத்தில் இரவு படத்துக்கு போகமுடியவில்லை என்கிற ஆத்திரம் அதிகமாகி தூங்கிக்கொண்டு இருந்த தனது தந்தை மீது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை பிடித்துவந்து முகத்தின் மீது ஊத்தியுள்ளான். தன் மீது பெட்ரோல் வாசனை வருகிறதே என பதட்டமாகி எழுந்துக்கொள்ளும் முன் தீ குச்சியை உரசி மகன் தனது தந்தைக்கு உயிரோடு தீவைத்துள்ளான். அவர் அலறி எழுந்து கத்தி போர்வையால் முகத்தை அழுத்தி தீயை அணைத்தார்.

 


சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டினர் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சியாகி அவனை பிடித்து தர்ம அடி அடித்துள்ளனர். காயம்பட்ட பாண்டியனை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். இதுப்பற்றி விருதம்பட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 


அப்பகுதி மக்களோ, பாண்டியன் ஒருக்குடிக்காரன். அக்குடும்பத்தில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடக்கும். இது பணம் தரவில்லை என்தபற்காக நடந்ததா, அல்லது வேறு காரணமா என விசாரிக்க வேண்டும் என போலீஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அஜித் ரசிகர்களுக்கு கத்திகுத்து... வீடியோ எடுக்கபோன ஒளிப்பதிவாளர் விபத்தில் சிக்கினார்

Published on 10/01/2019 | Edited on 10/01/2019

 

kk

 


வேலூரில் விஸ்வாசம் படம் ஓடும் தியேட்டரில் அஜித் ரசிகர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு இளைஞர்களுக்கு கத்திகுத்து விழுந்தது. அதில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுப்பற்றிய தகவல் தெரிந்ததும் வேலூர் செய்தியாளர்கள் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர்.

 


அதில் வேலூர் மாவட்ட கலைஞர் டிவி ஒளிப்பதிவாளர் சுதாகரும் ஒருவர். வேலூரில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள அடுக்கம்பாறையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, எதிரே வந்த லாரிக்கு வழிவிடுவதற்காக வண்டியை ஓரம் கட்டும்போது மணல் சறுக்கி கீழே விழுந்துள்ளார்.


இதில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை தூங்கி ஆட்டோ ஒன்றில் ஏற்றி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுதாகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

 

Next Story

தியேட்டரில் இடம் பிடிப்பதில் தகராறு... இருவருக்கு கத்திக்குத்து...!

Published on 10/01/2019 | Edited on 10/01/2019

 

vv

 

தமிழகத்தில் 500 தியேட்டர்களில் நடிகர் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி நள்ளிரவே வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. வேலூரில் அலங்கார் தியேட்டரிலும் இப்படம் வெளியாகியுள்ளது.

 


200 ரூபாய் விலை வைக்கப்பட்ட டிக்கெட்டை வாங்கிக்கொண்டு ரசிகர்கள் முதல் நாள் முதல் ஷோவை காணச்சென்றனர். அப்படி சென்ற ரசிகர்கள் 5 பேருக்குள் தியேட்டரில் சீட் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு அடிதடியாகியுள்ளது. அதற்குள் படம் போட்டுவிட அமைதியாக அமர்ந்தனர். முன்வரிசையில் வேலூர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்த ராஜேஷ், பிரசாந்த் என இருவர் அமர்ந்து படம் பார்த்துக்கொண்டு இருந்தனர். பின்னால் அமர்ந்திருந்த இருவர் அவர்கள் சீட் மீது காலை தூக்கிப்போட்டுள்ளனர். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மீண்டும் அடிதடியாக ராஜேஷ், பிரசாந்த் இருவரையும் சரமாரியாக கத்தியால் குத்தினர். அவர்கள் வலியால் கத்தினர். குத்தியவர்கள் எஸ்கேப்பாகிவிட்டனர்.

 


பின்னர் தியேட்டர் ஊழியர்கள் மூலமாக கத்திக்குத்துக்கு ஆளானவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருவரும் அனுமதிக்கப்பட்டள்ளனர். இதில் பிரசாந்த்க்கு அதிக கத்தி குத்து விழுந்துள்ளதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


இதுப்பற்றி வேலூர் தெற்கு காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, கத்தியால் குத்தியது யார் என தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.