Skip to main content

ராமர் கோவில் கட்ட சைக்கிளில் மணல்..!!!

Published on 19/01/2020 | Edited on 19/01/2020

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ராமேஸ்வரம் கோவிலில் பூஜை செய்த மணலை தரை மார்க்கமாக சைக்கிளில் எடுத்து சென்றனர் இந்து அமைப்பினர்.

 ராம ஜென்மபூமியான அயோத்தியில் ராமர் கோவில் கட்ட எவ்வித தடையுமில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதனை தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்கான பூர்வாங்க வேலையினை செய்து வருகின்றனர் குறிப்பிட்ட சில இந்து அமைப்பினர். 

 

 Sand on bicycle to build Rama Temple

 

இதற்காக ஒவ்வொரு தரப்பினரும் தங்க செங்கற்களையும் அனுப்பிய வண்ணமுள்ளனர். இதனின் தொடர்ச்சியாக ஆங்காங்கே தங்களால் முடிந்த உபயங்களை ஏனோர் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், திண்டுக்கல்லை சேர்ந்த இந்து முன்னணியினர் தங்களுடைய மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் மூன்று பேர் அக்னி தீர்த்தக் கடற்கரை மணலில் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை  செய்தனர். 

அதன்பின் அந்த மணலை எடுத்துக்கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி வரை சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். நாளொன்றுக்கு  40 முதல் 50 கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், ஓசூர் வழியாக பெங்களூர், தெலுங்கானா, ஹைதராபாத் வழியாக சென்று எழுபதாவது நாளில் அயோத்தியை அடைந்து ராமேஸ்வரத்தில் பூஜை செய்த மணலை கோவில் கட்டுவதற்காக வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர் அவர்கள். பக்தர்களும் தங்கள் பங்கிற்கு கடற்கரை மணலை எடுத்து அயோத்திக்கு புறப்பட்ட  இந்து முன்னணி அமைப்பினர் இடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்