தமிழகத்தில் கடந்த மே, ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (18.07.2024) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 21 செ.மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் பகுதியில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான வண்டிமேடு, பிடாகம், முண்டியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், சந்தைப்பேட்டை, மனம்பூண்டி, ஆவியுர் பகுதிகளிலும் கன மழை பொழிந்து வருகிறது.