அதிக படங்களை இயக்கி கின்னஸ்சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற பழம்பெரும் தெலுங்கு திரையுலக பெண் இயக்குநரும், நடிகையுமான விஜயநிர்மலா(வயது 73) உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் காலமானார்.
1950ல் மச்சரேகை என்ற தமிழ்ப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஜயநிர்மலா. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். எங்க வீட்டுப்பெண், என் அண்ணன், பணமா பாசமா, உயிரா மானமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து 47 படங்களில் நடித்துள்ளார். முதல் கணவரை விவாகரத்து செய்த பின்னர் 1977ல் நடிகர் கிருஷ்ணாவை மணந்துகொண்டார்.
தெலுங்கில் 44 திரைப்படங்களை இயக்கி, அதிக படங்களைஇயக்கிய பெண் இயக்குநர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். நடிகர் திலகம் சிவாஜிகணேசனை வைத்து இவர் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.