Skip to main content

இனி வி.ஏ.ஓ. பதவிக்கு தனித்தேர்வு கிடையாது!

Published on 03/11/2017 | Edited on 03/11/2017
இனி வி.ஏ.ஓ. பதவிக்கு தனித்தேர்வு கிடையாது!

வி.ஏ.ஓ. எனும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வுகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தநிலையில், இனி வி.ஏ.ஓ. பதவிக்கு என தனி தேர்வு நடத்தப்படாது எனவும், குரூப்-4 தேர்வுகளோடு சேர்த்து இந்த பதவிக்கான தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலர் விஜயக்குமார்,

இதுவரை வி.ஏ.ஓ மற்றும் குரூப்-4 என தனித்தனி தேர்வுகள் நடத்தப்பட்டன. குரூப்-4 தேர்வுகளுக்கு 15 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். வி.ஏ.ஓ. தகுதிக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். வி.ஏ.ஓ. பதவிக்கு விண்ணப்பிக்கும் 60% பேர் குரூப்-4 பதவிக்கும் விண்ணப்பிக்கின்றனர். ஒவ்வொரு தேர்வையும் தனித்தனியாக நடத்தும்போது ரூ.15கோடி வரை செலவாகிறது. மேலும், விண்ணப்பதாரர்கள் தனித்தனியே விண்ணப்பக் கட்டணங்கள் செலுத்தவேண்டிய நிலையும் இருக்கிறது.

இதுவரை நடந்த தேர்வுகளை ஆய்வு செய்ததில், ஒரு தேர்வில் தேர்ச்சிபெற்ற 20% பேர் மற்றொரு பதவிக்கான தேர்விலும் கலந்துகொள்கின்றனர். எனவே, குரூப்-4 அடங்கிய தேர்வுகளில் வி.ஏ.ஓ. தேர்வையும் இணைத்து நடத்துள்ளோம். 

இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்