Published on 19/08/2019 | Edited on 19/08/2019
சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றிய நரேஷ்(39) தனது குடும்பத்துடன் புழல் பகுதியில் குடியிருந்தார். இவருக்கும் மனைவி ஜெயஸ்ரீக்கும் இடையே ஏற்கனவே குடும்பத் தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (17-08-2019)இரவு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த நரேஷ், பின்னர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நடந்தபோது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது மகன், காலை கண்விழித்து பார்த்தபோது தான், தாயும், தந்தையும் இறந்து கிடந்தது தெரியவந்திருக்கிறது.