மும்பை சென்றார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்
தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை புறப்பட்டார். ஒரு வார காலத்துக்குள் பெரும்பான்மையை நிருபிக்க எடப்பாடி அரசுக்கு உத்தரவிடாவிட்டால், இந்த விவாகரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்து செல்லப்போவதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் அதிமுகவிலும் உட்கட்சி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக உள்துறை அமைச்சரிடம் ஆலோசனை நடத்த கவர்னர் திட்டமிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகின. இதனை அடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை புறப்பட்டுள்ளார்.