பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடந்து வரும் சூழலில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிந்த கையோடு பிரியாணியுடன் மது அருந்திய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த நிலையில் சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் காடையாம்பட்டி அருகே 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் சிலர் ஊரில் ஒரு பகுதியில் கூட்டாக அமர்ந்து பிரியாணியுடன் மது அருந்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மதுபோதையில் தள்ளாடியபடி படித்த பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளி முன்பு நின்று குரூப்பாக செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றன்ர். இதனைக் கண்டு அதிர்ந்த அந்த பகுதி மக்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மது அருந்திய மாணவர்களை பிடித்து கண்டித்து எச்சரித்து அனுப்பினர்.
சீருடையில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு மது கிடைத்தது எப்படி என்று விசாரிக்குமாறு ஓமலூர் காவல் நிலையத்திற்கு வலியுறுத்தல்கள் குவிந்து வருகிறது.