Skip to main content

இபிஎஸ்சை பற்றி  வெங்கையா நாயுடு   விடம் புகார் கூறிய  ஒபிஎஸ் மகன்

Published on 23/07/2018 | Edited on 27/08/2018
ops

 

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு  துணை முதல்வர் ஒபிஎஸ் சின் மகன் ரவீந்திரநாத்துக்கு தேனி மாவட்ட ஜெ  பேரவை செயலாளர் பதவியை ஒபிஎஸ்  போட்டு கொடுத்ததிலிருந்து தேனி மாவட்டத்தில்  அரசியல் சூடுபிடித்தது  வருகிறது.  மாவட்டத்தில்  நடக்க கூடிய அரசு நிகழ்ச்சிகள்  எது நடந்தாலும்  ஒபிஎஸ்சுடன் ரவிந்திரநாத்தும் கலந்து கொண்டு வருகிறார்.  அதுபோல் மாவட்டத்தில் கட்சி காரர்கள் முதல் பொது மக்கள்  வரை வீட்டுவிஷேங்கள் மற்றும் நல்லது கெட்டதிலும் கலந்து கொண்டு  வருவதால்  கட்சிகாரர்கள் மற்றும்  பொதுமக்கள் மத்தியில்  ஒபிஎஸ்  மகன் ரவீந்திரநாத்துக்கு  ஒரு தனி இமேஜ்சும் உருவாகி வருகிறது அதன் மூலம்  வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் போட்டி போடவும் இருக்கிறார் ரவி. 

 

கடந்த பாராளுமன்ற மன்ற தேர்தல் சீட் கேட்டும் கூட ஜெ கொடுக்கவில்லை. அதுனால ரவியும் மனம் நொந்து போய் விட்டார். அது நாள தான் இந்த முறை சீட் வாங்கி  வெற்றி பெற்று மத்திய  அமைச்சர் ஆக வேண்டும்  என்ற முடிவில் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் மற்றும்  மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் போன்ற  பகுதிகளுக்கும்  சென்று  கட்சி பொருப்பாளர்கள்  மற்றும்  சாதி மதம் பார்க்காமல்  அணைத்து சமூக சாதி தலைவர்களிடமும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக்  கொண்டு வருகிறார்.
     

      இந்த நிலையில் தான் சென்னை வந்த  துணை ஜனாதிபதி  வெங்கையா நாயுடுவை  ஒபிஎஸ் மகன்  ரவீந்திரநாத் திடீரென  சந்தித்து  பேசியும் இருக்கிறார்.   அதில்  ஒபிஎஸ் போலவே  இருக்கை முன் பகுதியில்  உட்கார்ந்து  பொருமையாகவும்.மரியாதையாகவும் உட்கார்ந்து  பேசி விட்டு வந்து  இருக்கிறார்.


           இது பற்றி மாவட்டத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்கள்  சிலரிடம்  கேட்டபோது...சமீபகாலமாக  முதல்வர்  எடப்பாடி  ஒபிஎஸ்சை  சரி வர மதிப்பதில்லை  அதை பற்றி தான் ரவி  வெங்கையா நாயுடுவிடம் பேசி இருக்கிறார்  அதோடு ஆட்சியில்  இருக்கிற பவர் மூலம்  கட்சியையும் தன் கட்டுப்பாட்டில்  வைத்துக்  கொள்ள வேண்டும்  என்ற  நோக்கத்தில் இபிஎஸ்  செயல் பட்டு வருகிறார் அதை பற்றியும் ரவி சொல்லியதுடன் மட்டும் மல்லாமல் தமிழக  அரசியலை பற்றியும்  பேசி இருக்கிறார் இப்படி  பிஜேபியில் முக்கிய தலைவர்களுடனும் தம்பி ரவீந்திரநாத்து ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு வருவதை கண்டு  மாவட்டத்தில் உள்ள எதிர் கட்சிகள் முதல் டிடிவி  ஆதரவாளரான தங்கதமிழ்செல்வன் கூட அசந்து போய் வருகிறார்  என்று கூறினார்கள்.


 

சார்ந்த செய்திகள்