Skip to main content

கரோனாவுக்கு சிகிச்சை அளித்ததா போலி கிளினிக்குகள்? - அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

 Vellore fake clinics Seal

 

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த காரணாம்பட்டு பகுதியில் கலை கிளினிக் மற்றும் அதே பகுதியில் மேலும் இரண்டு கிளினிக்குகள் இயங்கி வந்தன. அந்த கிளினிக்குகள் தினமும் திறக்கப்பட்டு நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பதாகவும், அந்த மூன்று கிளினிக்குகளும் போலி மருத்துவர்களால் நடத்தப்படுபவை என வருவாய்த்துறைக்கு தகவல் கிடைத்தது.


அதனை தொடர்ந்து காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் வட்டார மருத்துவ குழுவினர் அங்கு சென்றனர். அப்போது அதிகாரிகள் வருகையை முன்கூட்டியே தெரிந்துக்கொண்டு மூன்று கிளினிக்கில் இருந்த போலி மருத்துவர்கள் எஸ்கேப்பாகியுள்ளனர்.

அந்த கிளினிக்குகளுக்குள் சென்று ஆய்வு செய்தபோது ஊசி, மருந்து, மாத்திரைகள் டப்பா டப்பாவாக அங்கு இருந்தன. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், போலி மருத்துவர்கள் நடத்திய கிளினிக்குகளுக்கு சீல் வைத்தனர். போலி கிளினிக் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தர தப்பி சென்ற போலி மருத்துவர்களை காட்பாடி போலீஸார் தேடதுவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகமாகி சிவப்பு பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல மருத்துவர்கள் தங்களது கிளினிக்கை திறக்காமல் உள்ளனர். சில மருத்துவமனைகள் அரசின் உத்தரவை மீறி கரோனா நோயாளிகளை அனுமதி பெறாமல் அனுமதித்து சிகிச்சை அளித்தன. அது தொடர்பாக இந்திரா நர்சிங் ஹோம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்த போலி மருத்துவர்கள் நடத்திய கிளினிக்கில் யார், யார் வந்து சிகிச்சை பெற்று சென்றார்கள், அவர்களில் யாராவது கரோனா நோயாளியாக இருந்தார்களா, அவர்களுக்கு சிகிச்சை அளித்தார்களா என மருத்துவ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்