
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிநாயக்கன் பாளையத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீர்ர் தாஸ் சின் மகன் பிரவிண் தாஸ். இவன் மீது செயின் பறிப்பு, விபச்சார அழகிகளை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கோவை மாவட்டம் மட்டுமின்ரி நீலகிரி மாவட்டத்திலும், பிரவிண் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. குண்டர் சட்டத்திலும் பிரவிண் கைது செய்யப்பட்டுள்ளான். இன்று காலை பிரவிண் சர்ச்சுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பி அருகிலுள்ள மகாலட்சுமி கோவில் அருகே வந்தபோது, 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென தாங்கள் வைத்திருந்த அருவாளால் பிரவிணை முதுகு மற்றும் தலையில் வெட்டி அங்குள்ள சாக்கடையில் தள்ளி விட்டு உடனடியாக தப்பி சென்றனர். சம்பவ இட்த்திலேயே பிரவிண் ரத்த வெள்ளத்தில் பலியானான்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து பிரவிண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன் விரோதம் காரணமாக பிரவிண் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சம்பவ இடத்திற்கு வந்து நேரடியாக விசாரணையில் ஈடுபட்டனர். தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கபட்டு உள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். போலீஸ் நாய் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் கொலையாளிகளை தேடும் பணி நடைபெற்றது. இந்த கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.