

திருப்பத்தூர், வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டை கிராமத்தில் இருந்து தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு லாரி வந்துகொண்டு இருந்தது. வாணியம்பாடி கோணாமேடு பகுதியை சேர்ந்த சின்னவன் என்பவர் லாரியின் மேலுள்ள கேபின் மேல் அமர்ந்து வந்துகொண்டு இருந்துள்ளார். லாரி ஆவாரங்குப்பம் கிராமத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பியில் சின்னவன் தலை உராசியுள்ளது. அப்படி உரசியதில் சின்னவன் மின்சாரம் தாக்கி சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுப்பற்றி வாணியம்பாடி தாலுகா காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகியது. இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் ஜூலை 7ந் தேதி வழங்கியுள்ளனர். இறந்தபோது இறந்த தொழிலாளிக்கு இழப்பீடு தொகை கேட்டுள்ளனர், இறந்தவரின் உறவினர்கள். தேங்காய் மண்டி உரிமையாளர் பெருமாள், 'இதல என் தப்பு எங்கயிருக்கு, நான் ஏன் நஷ்டயீடு தரணும்' என கேட்டாராம்.
இதனை தொடர்ந்து இறந்தவரின் உறவினர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் சேர்ந்து வாணியம்பாடி ஆம்பூர் செல்லும் சாலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலிஸார் வந்து சமாதானம் செய்து போராட்டத்தை கைவிட செய்தனர். இருதரப்பும் காவல்நிலையத்தில் பேசி வருகின்றனர்.