எழுத்தாளர் க.அரவிந்த் குமார் எழுதிய இரண்டாயிரம் ஆண்டுகால தமிழ் இலக்கிய உலகம் கவனத்தில் கொள்ளாத கடல்சார் மக்களைப் பற்றிய பதிவு தேசம்மா நூல் வெளியீட்டு விழா சென்னை நாம் அறக்கட்டளை, தி.நகரில் 04.01.2020 சனிக்கிழமை மாலை (06.00) மணிக்கு நடைபெற்றது.
இதில் நக்கீரன் ஆசிரியர், விடுதலை சிறுத்தைகள்கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ், எழுத்தாளர் இரா.முருகவேள், எழுத்தாளர் என்.ஸ்ரீராம், எழுத்தாளர் ஷாஜி ஆகியோர் சிறுகதை புத்தகத்தை வெளியிட்டனர்.
சிறுகதை புத்தகத்தை வெளியிட்டு பேசிய நக்கீரன் ஆசிரியர், தேசம்மா சிறுகதை எழுதிய தம்பி அரவிந்த்க்கு வந்திருக்கும் அனைவரின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் தம்பி பாம்பன் பாடிய பாடலில் செல்போனால் புத்தகவாசிப்பு குறைந்து போச்சு என்பது நிதர்சனமான உண்மை.
இந்த சிறுகதை மீனவர்கள் கஷ்ட, நஷ்டங்களை பற்றிய கதையாக உள்ளது. மீனவர்கள் பற்றிய கதை என்றதும் என்னுடைய நினைவுக்கு வருவது அயோத்தி குப்பம் வீரமணிதான். அயோத்தி குப்பம் வீரமணி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அயோத்தி குப்பம் வீரமணியை கர்நாடக போலீசார் தேடுகிறார்கள் என்று செய்தி வந்தது. 2001இல், அயோத்தி குப்பம் வீரமணி தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் கடலில் இருப்பதால் பார்க்க முடியல என்று சொன்னார்கள். வீரமணியை ஏன் கர்நாடக போலீஸ் பார்க்க முயல்கிறது என்று நினைத்தேன். கடலிலிருந்து அயோத்தி குப்பம் வீரமணி வரும்வரை காத்துக் கிடந்தார்கள். வீரமணி பிடிக்க வந்தவர்கள் தங்கிய இடங்களில் எல்லாம் நமது ஆட்கள் தகவல்களை சேகரித்து கொடுத்தார்கள். இங்கே தங்கி இருக்கிறார்கள், அங்கே தங்கி இருக்கிறார்கள் என்பதையெல்லாம். அதேபோல் வீரமணியை அவர்கள் சென்று பார்த்ததாகவும், பார்த்தபோது தலையை தொங்கப்போட்டுக் கொண்டு போலீசார் சென்றதாகவும் செய்தி வந்தது.
என்ன நடந்தது, நாம் வீரமணிக்கு ஒரு ஆள் வச்சு வீரமணியிடம் என்ன கேட்டார்கள் என விசாரித்ததில், கர்நாடக போலீசார் என்னை கொலை செய்யணும் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுள்ளார்கள். மூன்று மாதமாக என்னை தூக்குவதற்காக திட்டம் தீட்டி இருந்தார்கள். அது முடியாததால் அயோத்தி குப்பம் வீரமணியிடம் சொல்லி தீர்த்துக்கட்ட முடிவு எடுத்தார்கள். இது எப்போ 2001இல், இதற்கு வீரமணி என்ன சொன்னார் என்பது தான் முக்கியம். ''யோவ் அவரு எவ்ளோ பெரிய ஆளு வீரப்பனையே பார்த்தவரு அவரை போய் தூக்கம் சொல்றியே போயா'' என்று சொல்லிவிட்டார். வீரப்பன் எங்கு காப்பாற்றி இருக்கிறான் நம்மள பாருங்க என்றார்.