Skip to main content

நாடாளுமன்றத்தில் ஒலித்த ஜெய் பீம்... அல்லாஹூ அக்பர் - திருமா தடாலடி!

Published on 10/02/2022 | Edited on 10/02/2022

 

ரகத

 

கர்நாடகா மாநிலத்தில், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி தூண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதன்காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன. சில இடங்களில் இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டனர். காவல்துறையினர் சில இடங்களில் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். 

 

அதன்தொடர்ச்சியாக ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை சூழ்ந்து காவி துண்டு அணிந்தவர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட, பதிலுக்கு அந்த மாணவி அல்லாஹு அக்பர் என கோஷமிட்டது, சிவமொக்கா பகுதி கல்லூரி ஒன்றில் தேசிய கோடி ஏற்றப்பட வேண்டிய இடத்தில் காவி கொடி ஏற்றப்பட்டது, ஹிஜாப் அணிந்த மாணவிகளை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றுவது என பல்வேறு வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

 

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "அரசியலமைப்பு வழங்கி உள்ள உரிமையின் அடிப்படையின் முஸ்ஸிம் மாணவிகள் ஆடைகளை அணிந்து வருகிறார்கள். அவர்களை தடுக்க யாருக்கும் எவ்வித உரிமையும் இல்லை. பெண்களை அவமதிக்கும், அச்சுறுத்தும் எந்த செயலையும் யாரும் ஆதரிக்கக் கூடாது. மத்திய அரசு தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெய் பீம்... அல்லாஹூ அக்பர்" எனக் கூறி பேச்சை நிறைவு செய்தார். 

 

 

சார்ந்த செய்திகள்