இஸ்லாமிய பெண்கள் தங்களின் மத வழக்கப்படி தொன்று தொட்டே ஹிஜாப் அணிந்து செல்வது வழக்கம். அதேபோல் பள்ளி மற்றும் கல்லூாி மாணவிகளும் ஹிஜாப் அணிந்தே தான் செல்கின்றனா். இந்த நிலையில் பாஜக ஆளும் கா்நாடக மாநிலத்தில் கல்லூாிகளில் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகளை குறிப்பிட்ட ஒரு மதத்தை சோ்ந்த மாணவா்கள் தடுத்து நிறுத்தி கொரோ செய்தததோடு மட்டுமல்லாமல் அந்த குறிப்பிட்ட மதத்தின் மாணவிகளும் காவி துப்பட்டாவை அணிந்து ஊா்வலமாக சென்றனா். இது கா்நாடகாவில் பல மாவட்டங்களில் உள்ள கல்லூாிகளில் விசுவரூபம் எடுத்து ஒரு மத மோதலை உருவாக்கியது.
இதன் பின்னணியில் இந்து அமைப்புகள் இருப்பதாகக் கூறி குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் இந்த பிரச்சினையைத் தடுக்க கா்நாடகா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பல அரசியல் கட்சி தலைவா்களும் கருத்து தொிவித்தனா். மேலும் தமிழ்நாட்டிலும் இதற்கு கடுமையான எதிா்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் குமாி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளா் திருமாவேந்தனின் மனைவி ஜென்சி இஸ்லாமிய பெண்களுக்கும், மாணவிகளுக்கும் ஆதரவாக ஹிஜாப் அணிந்து கொண்டு இடலாக்குடி பகுதியில் உள்ள இஸ்லாமிய பெண்களிடம் சென்று ஆதரவு கொடுத்தாா். மேலும் இந்த பிரச்சினைக்கு முடிவு வரும் வரை தொடா்ந்து ஹிஜாப் மட்டுமே அணிவதாக ஜென்சி கூறியுள்ளாா்.