கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருந்து, உணவகங்கள், மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது.
மது கடைகள் மூடப்பட்டுள்ளதால், கடைகளில் உள்ள மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்கிறது. மேலும் மது கிடைக்காததால் குடிமகன்கள் குளிர்பானத்தில் கெமிக்கல் கலந்து குடித்து உயிரிழக்கும் சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மதுபானங்கள் கிடைக்காத காரணத்தால் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரயில்வே ஊழியர்கள் பிரதீப், சிவசங்கர், கார் ஓட்டுநர் சிவராமன் ஆகிய மூவரும் போதைக்காக குளிர்பானத்தில் பெயிண்ட் அடிக்கப் பயன்படுத்தப்படும் வார்னிஷ் கலந்து குடித்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே போதைக்காக புதுக்கோட்டையில் குளிர்பானத்தில் சேவிங் லோஷனை கலந்து குடித்த மூன்று பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.