Published on 24/12/2024 | Edited on 24/12/2024
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து.1000 நாட்கள் ஆகியும் 10.5.சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து, சென்னை கொளத்தூர் லட்சுமி அம்மன் கோயில் முன்பு, காலை 10 மணி அளவில்,மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக மாவட்டச் செயலாளர், வழக்கறிஞர் ஜி.வி.சுப்பிரமணியம் தலைமையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பும் நடைபெற்றது.