தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் உடல்நலக்குறைவு காரணமாக கலைஞரின் நேர்முக உதவியாளராக சுமார் 48 ஆண்டுகள் பணியாற்றியவர் சண்முகநாதன். தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த அவர், கலைஞர் முதல்வராக பொறுப்பேற்ற உடன் தனது உதவியாளராக கலைஞர் அவரை நியமித்து கொண்டார். கலைஞரின் நிழல் என்று திமுகவினரால் அழைக்கப்பட்ட அவரது மறைவு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக திமுக மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கலைஞரின் மனநிலை அறிந்து அவர் கூறும் முன்னரே அவர் நினைக்கும் காரியத்தை திறம்பட முடிக்கும் ஆற்றல் அவருக்கு அதிகம் உண்டு. இதனை பல மேடைகளில் கலைஞர் அவர்களே நேரடியாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அவரை நேரடியாக சந்தித்து உடல்நலம் விசாரித்த நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் இயற்கை எய்தியுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அண்ணனே!
சண்முகநாதனே! போய்வா!
அண்ணாவுக்குப் பிறகு கலைஞர்
அதிகம் உச்சரித்த பெயரே
போய்வா!
கலைஞர் ஒலி
நீ எழுத்து
அறிவின் ஆதிக்கமே
அன்பின் நீர்த்தேக்கமே போய்வா!
கட்சி ஆட்சி குடும்பமென்னும்
முக்கோணத்தின்
முக்காலமறிந்த திரிஞானியே
உழைப்பின்
சத்தமில்லாத சரவெடியே
ஓய்வெடு; போய்வா!