Skip to main content

தலைவியாய்க் கூட அல்ல... மனுஷியாய் மதிக்க வேண்டாமா?-வைரமுத்து கண்டனம் 

Published on 11/10/2020 | Edited on 11/10/2020
VAIRAMUTHU

 

கடலூர் தெற்குத்திட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமரவைத்து அவமதிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக  பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் சிந்துஜா வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் புவனகிரி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மட்டுமல்ல இதற்கு முன்பே பட்டியலின ஊராட்சிமன்றத் தலைவர்கள் அவமதிக்கப்படுவது, சுதந்திர தின விழாவில் கொடியேற்ற விடமால் தடுப்பது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. ஏன் இதைவிட உச்சமாக ஊராட்சி மன்றத் தலைவரை சவக்குழி தோண்ட சொன்னது வரை, ஊராட்சி மன்றத் தலைவர்களை அவமதிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. 

 

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த டிவிட்டர் பதிவில்,   

 

பட்டியலினத்துத் தாயொருத்தி
தரையில் வீசப்படுவதா?

அவரென்ன மண்புழுவா?

தலைவியாய்க் கூட அல்ல...
மனுஷியாய் மதிக்க வேண்டாமா?

என் வெட்கத்தில்
துக்கம் குமிழியிடுகிறது.

தேசியக்கொடி அரைக்கம்பத்தில்
பறக்க வேண்டிய
துயரங்களுள் இதுவும் ஒன்று

 

என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்