Skip to main content

கலிங்கப்பட்டியில் வார்டு கவுன்சிலருக்கு கூட ஜெயிக்க முடியாது- வைகோவை விமர்சித்த ஹெச்.ராஜா!!

Published on 02/02/2019 | Edited on 02/02/2019
hraja

 

கலிங்கப்பட்டியில் வார்டு கவுன்சிலருக்கு நின்றுகூட வைகோ ஜெயிக்க முடியாது என ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசுகையில், 

 

கலிங்கபட்டியில் வார்டு கவுசிலர் பதவிக்கு நின்று ஜெயித்துவிடுவாரா வைகோ. ஊர்க்குருவி எவ்வளவுதான் உயர பறந்தாலும் டெல்லியில் போய் பேட்டி கொடுத்தால் நேஷனல் லீடர் ஆகிடுவாரா. மாவட்டத்தில் செல்வாக்கு இருந்தால் அவர் மாவட்ட அரசியல்வாதி, எதாவது ஒரு பகுதியில் செல்வாக்கு இருந்தால் அவர் அந்த பகுதியின் ரீஜினல் அரசியல்வாதி, மாநிலத்தில் செல்வாக்கு இருந்தால் அவர் ஸ்டேட் லீடர். யாருக்கு எங்கையும் செல்வாக்கு இல்லையோ அவர் நேஷனல் லீடர். அப்படி ஒரு நேஷனல் லீடர் வைகோ எனவே அவர் மோடிக்கு எதிராக பேசிக்கொண்டிருக்கிறார்.

 

மோடி பற்றி பேசும் அளவிற்கெல்லாம் வைகோ இல்லை அவர் இருக்கும் உயரம் என்ன இவர் உயரம் என்ன என விமர்சித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்