Skip to main content

கரும்பலகையில் எழுத வேண்டிய எங்களை ரோட்டில் எழுத வைக்கிறார்களே! பரிதாப நிலையில் ஆசிரியர்கள்..!

Published on 08/08/2017 | Edited on 08/08/2017
கரும்பலகையில் எழுத வேண்டிய எங்களை ரோட்டில் எழுத வைக்கிறார்களே! பரிதாப நிலையில் ஆசிரியர்கள்..!



2013ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பின் சார்பில் திருச்சியில் 300க்கு மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முன் அறிவிப்பின்றி தீடீரென இந்த மறியல் போராட்டம் நடந்ததால், போலீசார் யாரும் எதிர்பார்க்காத நேரம் அங்கே பாதுகாப்புக்கு எந்த போலீசும் இல்லை. இதையடுத்து தகவல் அறிந்து கோட்டை ஏசி பெரிய்யா தலைமையில் போலீசார் போராட்ட இடத்திற்கு விரைந்து வந்து ஆசிரியர்களை கைது செய்ய முயற்சி செய்தனர்.

அப்போது பேராட்டகாரர்கள் பள்ளி கரும்பலைகளில் எழுத வேண்டிய எங்களை ரோட்டில் எழுத வைத்துவீட்டீர்களே என்று தரையில் சாக்பீசால் எழுத ஆரம்பித்தார்கள். பொதுமக்கள் எல்லாம் அதிர்ச்சியடைந்தனர். இதனால் காவல்துறையில் செய்வதறியாமல் திகைத்து போயிருந்தனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் ஆசிரியர்களை கைது செய்து திருமண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்த போராட்டம் குறித்து நாம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரிடம் பேசிய போது…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது 2013ல் ஆசிரியர் தகுதிதேர்வு நடத்தப்பட்டது. அத்தேர்வில் தேர்ச்சி பெற்று தோரயமாக 80,000 பேர் (50,000 இடைநிலை ஆசிரியர், 30,000 பட்டதாரி ஆசிரியர்) இது வரை பணி கிடைக்காமல் அல்லல்பட்டு வருகிறோம்.

எங்களுடைய கோரிக்கையாக;

தற்சமயம் காலிப்பணியிடங்களை 2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்பிட வேண்டும். இனி வரும் காலங்களில் 2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். (தகுதிதேர்வு சான்றிதழ் 7 வருடம் மட்டுமே செல்லுபடியாகும். தற்போது 4 ஆண்டுகள் முடிந்துவிட்டது) சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் டி.ராஜா 2013ல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குமாறு ஆசிரியதேர்வு வாரிய தலைவருக்கும், பள்ளிகல்விசெயலருக்கும் பரிசீலனை செய்துள்ளார். அவரது பரிசீலனையை ஏற்று 2013 தேர்வர்களுக்கு வருடத்திற்கு இரண்டு மதிப்பெண் வீதம் வழங்கிட ஆவணம் செய்ய வேண்டும்.

சம்மந்தபட்ட துறைகளுக்கு எத்தனையோ முறை மனு அளித்தும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. எங்களின் பரிதாப நிலையை இந்த நாட்டு மக்களுக்கு உணர்த்திட போராட்டத்தில் ஈடுபட்டோம். வேலைகொடு இல்லையே சோறு கொடு, தேர்ச்சி பெற்ற எங்களுக்கு ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று நினைக்கிறோம் ஆனால் எங்களை மறியல் முற்றுகை என்கிற நிலைக்கு தள்ளி சிறையில் தள்ளுகிறார்கள் என்றார்.

- ஜெ.டி.ஆர்.

சார்ந்த செய்திகள்