கரோனா எதிரொலியாக நாடு முமுவதும் மக்கள் முடங்கிப் போயுள்ளனா். அத்தியாவசிய பொருட்களை வாங்குதற்காக மக்கள் குறிப்பிட்ட நேரத்தி்ல் சில இடங்களில் 5 பேருக்கு மேல் கூடாமல் போலீசாா் நடவடிக்கை எடுத்து வருகிறாா்கள். அதையும் மீறி சுற்றித் திாிபவா்களை போலீசாா் எச்சாித்து நடவடிக்கை எடுத்து வருகிறாா்கள்.
இதில் நாகா்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பொிய சந்தைகளான ஒழுகினாசோி அப்டா மாா்க்கெட் மற்றும் வடசோி கனகமூலம் சந்தை பூட்டப்பட்டதால் அத்தியாவசிய பொருளான காய்கறிகள் வாங்கவதற்கு மக்கள் முண்டியடித்து கடைகளில் நெருக்கமாகச் சூழ்ந்து நின்று வாங்குகின்றனர். அதனால் அங்கு ஒரு மீட்டா் இடைவெளியை யாரும் பின்பற்ற வில்லை.
இதனைக் கருத்தில் கொண்ட மாநகராட்சி நிா்வாகம் மாவட்ட தலைநகர பஸ்நிலையமான வடசோி பஸ்நிலையத்தை மாநகராட்சி மாா்க்கெட்டாக மாற்றியுள்ளது. இதற்காக பஸ்நிலையத்தின் ஒரு பகுதியான திருவனந்தபுரம், திருநெல்வேலி, சென்னை, மதுரை வழி தடங்கள் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும் இடத்தில் வாிசையாக காய்கறிகளை வைத்து கொண்டு மக்கள் ஒரு மீட்டா் இடைவெளி விட்டு நின்று காய்றிகளை வாங்கிச் செல்லும் விதமாகக் கட்டங்கள் போடப்பட்டுள்ளன.
மேலும் மக்கள் பஸ்நிலையத்துக்குள் வந்து காய்கறிகள் வாங்கிச் செல்ல இரண்டு வழிப் பாதைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. உள்ளே வரும் மக்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் குழாய் நீாில் கைகளைக் கழுவிய பிறகு தான் காய்கறி வாங்க அனுமதிக்கப் படுகிறாா்கள். மாநகராட்சி நிா்வாகம் ஏற்படுத்தியிருக்கும் இந்த காய்கறி மாா்க்கெட்டால் மக்கள் ஒருவரை ஒருவர் தொடாமல் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனா்.