Skip to main content

தேனிமாவட்டத்தில் வெள்ளபெருக்கால் அழிந்து வரும் விவசாயம்! ஒபிஎஸ் தொகுதியில் நிலச்சரிவு!!

Published on 16/08/2018 | Edited on 27/08/2018

 

கடந்த பத்து நாட்களாக கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக கேரளாவில் உள்ள எட்டு மாவட்டங்களில்  வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்தான் திடீரென மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதின் மூலம் தேனிமாவட்டத்தில் அங்கங்கே  உள்ள குளங்கள் நிரம்பி வருகிறது. அதோடு இந்த தொடர் மழை மூலம் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

அப்படி இருந்தும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்தின் மூலம் தமிழகத்திற்கு அதிமாக குழாய்கள்,  வறட்டாற்று பாலம் மூலமாகவும்  தண்ணீர் வருவதால் முல்லைப்பெரியாறு ஆற்றில் தண்ணீர்  அளவுக்கு அதிகமாக வந்த வண்ணம்  உள்ளது.  இதனா‌ல்  லோயர் கேம்பில்  இருந்து கூடலூர், கம்பம், பாளையம், சின்னமனூர், வீரபாண்டி  ஆகிய பகுதிகளில் வரக்கூடிய முல்லைப் பெரியாறு தண்ணீர் ஆற்றுக்கு மேல் சென்று  அப்பகுதிகளில் இருக்க கூடிய விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் தண்ணீரில் மிதந்து வருகிறது.

 

இந்த நிலையில் துணை முதல்வர் ஒபிஎஸ் தொகுதியான போடி தொகுதியில் உள்ள போடி மெட்டு அருகே உள்ள பூம்பாறையில் நிலச்சரிவு  ஏற்பட்டதின் பேரில் மூணாறு போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே  குமுளி, கம்பம் பகுதிகளில் இருந்து  மூணாறு போகும் போக்குவரத்துத்தடை செய்யப்பட்டு போடி மெட்டு வழியாகதான் போய் வந்தார்கள். தற்பொழுது போடி மெட்டு பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டதின்  மூலம் மூணாறுக்கு செல்வதற்கான  ஒட்டுமொத்த போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு  இருப்பதால் கேரளவுக்கு போக வழி இல்லாமல்  போடி, கம்பம் பகுதிகளில் தங்கி வருகிறார்கள். ஆனால்  தொடர்ந்து  தேனி மாவட்டத்தில்  மழை பெய்துவருவதால் பாதுகாப்பு குழுவும் தயார் நிலையில்  இருந்து வருகிறது.

சார்ந்த செய்திகள்