Published on 31/05/2021 | Edited on 31/05/2021
கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின் பி (Amphotericin B) மருந்து குப்பிகளை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக ஒதுக்கியது மத்திய அரசு.
அதன்படி, அதிகபட்சமாக மஹாராஷ்ட்ரா மாநிலத்திற்கு 5,900; குஜராத் மாநிலத்திற்கு 5,630; ராஜஸ்தானிற்கு 3,670; கர்நாடகத்திற்கு 1,930; மத்திய பிரதேசத்திற்கு 1,920; உத்தரப்பிரதேசத்திற்கு 1,710; ஆந்திர பிரதேசத்திற்கு 1,600 என ஆம்போடெரிசின் பி மருந்து குப்பிகளைக் கூடுதலாக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதேபோல் தமிழகத்திற்கு 680, கேரளாவிற்கு 70, புதுச்சேரிக்கு 60 என மருந்து குப்பிகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.
மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இன்று (31/05/2021) மட்டும் கூடுதலாக சுமார் 30,100 ஆம்போடெரிசின் பி மருந்து குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.