![Unidentified woman passes away in trichy kollidam river](http://image.nakkheeran.in/cdn/farfuture/zZ2fx8mfgjSuGo2uZjZDNx7ehGOaVp8H8jGQFSVzBWc/1707118448/sites/default/files/inline-images/th-1_4619.jpg)
திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் பாலத்தின் அடியில் ஒரு பெண் சடலம் பாதி எரிந்த நிலையில் இருந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு சமயபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்தத் தகவலின் அடிபடையில் கொள்ளிடம் ஆற்று பாலத்திற்கு விரைந்துவந்த திருச்சி டி.எஸ்.பி. அஜய் தங்கம், சமயபுரம் காவல் ஆய்வாளர் விதுன் குமார் ஆகியோர் கொள்ளிடம் பாலத்தின், ஆற்றின் நடுபகுதியில் பாதி எரிந்து, அழுகிய நிலையில் இருந்த பெண் சடலத்தை கைப்பற்றினர். பிறகு பிரேதப் பரிசோதனைக்காக அந்த பெண் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்தப் பெண் யார், எதற்காக ஆற்று பகுதிக்கு வந்தார்? இது தற்கொலையா அல்லது கொலையா? வேறெங்கேனும் கொலை செய்துவிட்டு, ஆற்று பகுதியில் உடல் எரிக்கப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீஸார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.