கடந்த 4 நாட்களாக சுஜித்தின் தமிழகம் மற்றும் இந்தியா முழுக்க ஓங்கியது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டான். அவன் உயிரோடு திரும்ப வேண்டும் என்று பலரும் வேண்டிக்கொண்ட நேரத்தில் அவன் சடலமாக மீட்கப்பட்டது எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது. உயர்நீதிமன்றமும் இந்த சம்பவத்தை கண்டித்தது. தற்போது தமிழக அரசு உபயோகமின்றி இருக்கும் ஆழ்குழாய் கிணறுகளை மூடவேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தற்போது அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் வாளரக்குறிச்சி கிராமத்தில் ஏரிக்கரை அருகில் தனியாா் நிலத்தில் ONC நிறுவனாத்தால் ஆய்வுக்காக போடப்பட்ட 700 அடிக்கும் மேலான ஆழ்குழாய் கிணறு பொதுமக்களை மிரட்டி வருகிறது. இதனால் கிராம பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் இந்த ஆழ்குழாய் கிணறை மூடவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.