ஒவ்வொரு முறை நீதிமன்றத்திற்கு வரும்போதும் போலிஸாரின் அடக்குமுறைக்கு பயந்து 300 காவலர்கள் புடைசூழ வலம் வரும் நிர்மலாதேவி இந்த முறை பத்திரிகைக்கு பேட்டி கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் தனி ஆளாக வழக்கறிஞர்கள் கூட இல்லாமல் காரில் வந்திறங்கினார்.
நிமலாதேவி நம்மை பார்த்ததும் சைகையால் தன் வாயை பொத்தி எதுவும் பேசகூடாது.. என காண்பித்து கோர்ட்டில் ஆஜராக தனி ஆளாக நடந்து செல்ல, காரை ஓட்டி வந்தவர் சார் எதுவும் பத்திரிக்கைக்கு பேசகூடாது என்று வக்கீல் சொல்லியதால்தான் நிர்மலா மேடம் சைகையால் உங்களிடம் அப்படி காண்பிக்கிறார் என்றார்.
மேலும் போனமுறை ஜாமினில் விடுதலை ஆனபோது பொதுவாக பேட்டி கொடுத்தாரே படித்தார்களா? சார் அப்படி எதுவும் இந்தமுறை கொடுக்ககூடாது என்று சொல்லி வந்திருக்கிறார். முழுவதுமாக விடுதலை ஆனபிறகு பேட்டி கொடுப்பார் என்றார் ரவி.
அவர் ஜாமினில் வெளிவந்ததிலிருந்து இன்றுவரை அவரது இரண்டு பெண் குழந்தைகளும் அவரை பார்க்க வர வில்லை என்பதாலும், பெரும் நிதி சுமையில் சிக்கியதாலும் கவலை அடைத்துள்ளாராம் நிர்மலா.
செய்தியாளர்கள்: சி.என்.ராமகிருஷ்ணன்,அண்ணல்
படங்கள்:ராம்குமார்