Published on 26/05/2021 | Edited on 26/05/2021
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு, முழு ஊரடங்கை அறிவித்துள்ள சூழலில், இத காலத்தில் மக்கள் வெளியே வருவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வண்டிகளில் வைத்து காய்-கனி வியாபாரங்கள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனைப் பல மாவட்டங்களிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்து வருகின்றனர். அந்தவகையில், திருவல்லிக்கேணி சேப்பாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்களை அந்த தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஐஸ் ஹவுஸ் சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்திலிருந்து துவங்கி வைத்தார்.