Skip to main content

செங்கத்தில் இரு பெண்கள் கொலை

Published on 17/08/2017 | Edited on 17/08/2017
 செங்கத்தில் இரு பெண்கள் கொலை!
சைக்கோ மனிதர்கள் கொலைவெறி தாண்டவமா? 
மர்ம நபர்களின் திட்டமிட்ட கொலைவெறி தாக்குதலா?



திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் கிராமத்தில் முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு தனது  மனைவி தில்ஷத் மற்றும் தனது தாய் அஸ்மத்பீ ஆகியோருடன் வசித்து வருபவர் யூனிஸ்கான். இவர் தனது மகனை காண கிருஷ்ணகிரி சென்றுள்ளார். இவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தி.மலை to பெங்களுர் செல்லும் மெயின் சாலை ஓரம் அமைந்துள்ள இவரின், ஓட்டு வீட்டின் மேற்க்கூறையினை பிரித்து நள்ளிரவில் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், வீட்டின் உள்ளே உறங்கி கொண்டிருந்த இவரது தாய், அஸ்மத் பீ (82) என்பவரை கொன்று விட்டு, இவரது மனைவி தில்ஷத் (45) என்பவரை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். அதிகாலையில் தகவல் அறிந்து ஒன்று திரண்ட இவர்களது உறவினர்கள் போக்குவரத்து நெடுஞ்சாலையின் நடுவே அமர்ந்து போராட்டம் நடத்தினர். 

தகவல் அறிந்து உடனே வந்த செங்கம் காவல்துறையினர், தி.மலை மாவட்ட காவல் துறை அதிகாரிகளை வரவழைத்து SP தலைமையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இதே போல் ஒரு சம்பவம் இந்த ஊரின் பக்கத்து கிராமமான காயம்பட்டு கூட்டு ரோட்டில் உள்ள ஓட்டு வீட்டில் தனியாக இருந்த பாட்டி மற்றும் 7 வயது சிறுமியும், மர்ம நபர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு உட்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

செங்கம் பகுதியில் தொடர்ந்து இதுபோல் நடந்து வரும் கொடூர சம்பவங்கலால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

-ராஜா

சார்ந்த செய்திகள்